ஜோதிடம்

* ‘வீரர்கள் இயந்திரம் அல்ல. அவர்கள் மீதான சுமையை மிகக் கவனமாக கையாள வேண்டியது அவசியம்’ என்று பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளார்.* டி20 உலக கோப்பை தொடருக்கு நான் தேர்வு செய்யப்படாதது மிகுந்த ஏமாற்றமளித்தது என்று சுழற்பந்துவீச்சாளர் சாஹல் கூறியுள்ளார்.* தாக்காவில் நடைபெறும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள், மகளிர் மற்றும் கலப்பு குழு பிரிவு பைனலுக்கு முன்னேறியுள்ள இந்திய அணியினர் 3 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.* இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மின்டன் தொடரின் 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் பி.வி.சிந்து, லக்‌ஷியா சென் தகுதி பெற்றுள்ளனர்.* பாகிஸ்தானுடன் டி20 தொடரில் மோதவுள்ள வங்கதேச அணியில் முஷ்பிகுர் ரகிமுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.* ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியாவின் மிதாலி ராஜ் 3வது இடத்திலும், ஸ்மிரிதி மந்தனா 6வது இடத்திலும் நீடிக்கின்றனர்.* சான் மரினோ அணியை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது.* வடக்கு அயர்லாந்துடன் 0-0 என டிரா செய்த இத்தாலி அணி, உலக கோப்பைக்கு தகுதி பெற பிளே ஆப் சுற்றில் விளையாட வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.



from Dinakaran.com |17 Nov 2021 https://ift.tt/3qFwunj
via IFTTT

Post a Comment

0 Comments