ஜோதிடம்

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை (417) பின்னுக்குத் தள்ளி ஆர்.அஷ்வின் 3வது இடம் பிடித்துள்ளார். கான்பூர் டெஸ்டின் 2 இன்னிங்சிலும் தலா 3 விக்கெட் கைப்பற்றி அசத்திய அஷ்வின் இதுவரை 80 டெஸ்டில் விளையாடி 418 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 2வது இடத்தில் உள்ள கபில் தேவ் (434 விக்கெட் 131 போட்டி) சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 17 விக்கெட் மட்டுமே தேவை. இந்த வரிசையில் அனில் கும்ப்ளே 132 டெஸ்டில் 619 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.



from Dinakaran.com |30 Nov 2021 https://ift.tt/3rjYflr
via IFTTT

Post a Comment

0 Comments