* வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்ற பாகிஸ்தான் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 இன்று நடக்கிறது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன.* தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் (4 நாள் ஆட்டம்) விளையாட உள்ள இந்தியா ஏ அணியில் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் இஷான் கிஷண், வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளனர்.* மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் 8வது ஆண்டு தினத்தையொட்டி, கோழிக்கோடு மலபார் கிறித்துவக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் வசிஷ்ட் எழுதி, மாணவி சிலு பாத்திமா பாடிய ‘டச் ஆப் ஜீனியஸ்’ என்ற பாடல் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.* மான்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து அணி பயிற்சியாளர் கன்னர் சோல்ஸ்க்ஜேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். வாட்போர்டு அணிக்கு எதிராக 1-4 என்ற கோல் கணக்கில் பரிதாபமாகத் தோற்று பிரிமியர் லீக் தொடரில் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டதை அடுத்து அணி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/3CDrQIE
via IFTTT
0 Comments