ஜோதிடம்

சென்னை: மனாமா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர் ராம்குமார் ராமநாதனுக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. பஹ்ரைனில் நடந்த இந்த தொடரின் பைனலில் ரஷ்யாவின் எவ்ஜெனி கார்லோவ்ஸ்கியுடன் மோதிய ராம்குமார் அபாரமாக வென்று முதல் முறையாக ஏடிபி சேலஞ்சர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன் இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் என்ற பெருமையயும் வசப்படுத்தினார்.அவரது இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில், சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அம்பா குழுமம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் விளையாட்டுத் துறை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். சாதனை வீரர் ராம்குமாருக்கு அம்பா குழும மேலாண்மை இயக்குனர் பழனியப்பன் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.



from Dinakaran.com |28 Dec 2021 https://ift.tt/3z1PPBb
via IFTTT

Post a Comment

0 Comments