* 2019 சிட்னி டெஸ்டில் குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தியபோது, ‘வெளிநாட்டு மைதானங்களில் இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர் குல்தீப் தான் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது மனதளவில் என்னை வெகுவாகப் பாதித்தது. ஒரு வீரர் சிறப்பாக செயல்படுவதை பாராட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அது மற்றவர்களின் மனதை புண்படுத்துவதாக இருக்கக் கூடாது. அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். கிரிக்கெட்டில் அது இல்லாதது துரதிர்ஷ்டவசமானது’ என்று ஆர்.அஷ்வின் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.* இந்திய அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ் காயம் காரணமாக விலகியுள்ளார். * பெங்களூருவில் இன்று தொடங்கும் புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ் - யு மும்பா (இரவு 7.30), தெலுகு டைடன்ஸ் - தமிழ் தலைவாஸ் (இரவு 8.30), பெங்கால் வாரியர்ஸ் - உ.பி.யோதா (இரவு 9.30) மோதுகின்றன.
from Dinakaran.com |22 Dec 2021 https://ift.tt/33I8NB7
via IFTTT
0 Comments