அடிலெய்டு: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்திருந்தது. ஹாரிஸ் 3, வார்னர் 95 ரன்னில் ஆட்டமிழந்தனர். லாபுஷேன் 95, ஸ்மித் 18 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். டெஸ்ட் போட்டிகளில் தனது 6வது சதத்தை பதிவு செய்த லாபுஷேன் 103 ரன் எடுத்து (305 பந்து, 8 பவுண்டரி) ராபின்சன் பந்துவீச்சில் வெளியேறினார்.ஸ்மித் ஒரு முனையில் தாக்குப்பிடிக்க, டிராவிஸ் ஹெட் 18 ரன், கேமரான் கிரீன் 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து ஸ்மித்துடன் அலெக்ஸ் கேரி இணைந்தார். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த இருவரும் 6வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தனர். ஸ்மித் 93 ரன் (201 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), கேரி 51 ரன் (107 பந்து, 5 பவுண்டரி) விளாசி ஆண்டர்சன் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.மைக்கேல் நெசர் 35, ஜை ரிச்சர்ட்சன் 9 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துகொள்வதாக அறிவித்தது (150.4 ஓவர்). ஸ்டார்க் 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 3, ஆண்டர்சன் 2, பிராடு, வோக்ஸ், ராபின்சன், ரூட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்திருந்தபோது மோசமான வானிைல காரணமாக 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஹசீப் 6, பர்ன்ஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். மலான் 1 ரன், கேப்டன் ஜோ ரூட் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.
from Dinakaran.com |18 Dec 2021 https://ift.tt/32fuXdu
via IFTTT
0 Comments