சென்னை: சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஸ்ரீ கேசவன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட சங்கம் சார்பில் ‘பி-டிவிஷன்’ கைப்பந்து போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி ஆடவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி டிச.26ம் தேதி முதல் டிச.30ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூடவே டிச.27ம் தேதி முதல் டிச.29ம் தேதி வரை மகளிருக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடக்கும். போட்டிகள் அனைத்தும் சென்னை எழும்பூர் ஹாக்கி அரங்கில் நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ள அணிகள் டிச.24ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலறிய, பதிவு செய்ய சங்கத்தின் தலைமை செயல் அலுவலர் பழனிப்பன் அவர்களை 94448 42628 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
from Dinakaran.com |17 Dec 2021 https://ift.tt/3dZpFW4
via IFTTT
0 Comments