அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்டில், ஸ்டார்க் மற்றும் லயன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடடந்து வரும் இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (150.4 ஓவர்). வார்னர் 95, லாபுஷேன் 103, ஸ்மித் 93, கேரி 51, நெசர் 35, ஸ்டார்க் 39* ரன் விளாசினர். இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்திருந்தது. மலான் 1 ரன், கேப்டன் ஜோ ரூட் 5 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் நிதானமாக விளையாடிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 138 ரன் சேர்த்தனர். ஜோ ரூட் 62 ரன் (116 பந்து, 7 பவுண்டரி) விளாசி கிரீன் பந்துவீச்சில் ஸ்மித் வசம் பிடிபட்டார். மலான் 80 ரன் (157 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஸ்டார்க் வேகத்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த போப் 5 ரன்னில் வெளியேற, பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஓரளவு தாக்குப்பிடித்த ஸ்டோக்ஸ் - வோக்ஸ் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 33 ரன் சேர்த்தது. வோக்ஸ் 24 ரன், ஸ்டோக்ஸ் 34 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ராபின்சன் 0, ஸ்டூவர்ட் பிராடு 9 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து முதல் இன்னிங்சைல் 236 ரன்னுக்கு சுருண்டது (84.1 ஓவர்). ஆண்டர்சன் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஸ்டார்க் 4, லயன் 3, கிரீன் 2, நெசர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 237 ரன் முன்னிலையுடன் பாலோ ஆன் தராமல் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்துள்ளது. வார்னர் 13 ரன் எடுத்து ரன் அவுட்டானார். ஹாரிஸ் 21, நெசர் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று பரபரப்பான 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
from Dinakaran.com |19 Dec 2021 https://ift.tt/3EaiMfh
via IFTTT
0 Comments