* ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணியில் இடம் பெற்றுள்ள 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொல்கத்தாவில் மும்பை அணியுடன் இன்று தொடங்க இருந்த 2 நாள் பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.* இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதுகு வலி காரணமாக வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்டில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தொடக்க வீரர் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. 2018ம் ஆண்டிலும் கோஹ்லிக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்னை ஏற்பட்டதால் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் இருந்து விலக நேரிட்டது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நடப்பு தொடரில் தனது 100வது டெஸ்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதற்கு சற்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.* இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா (35 வயது), 2016ம் ஆண்டுக்குப் பிறகு தரவரிசையில் மீண்டும் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார். அவர் தற்போது 10வது இடத்தில் உள்ளார்.* கொரோனா பிரச்னை காரணமாக ஐ-லீக் கால்பந்து தொடர் 6 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |04 Jan 2022 https://ift.tt/3JFafF6
via IFTTT
0 Comments