ஜோதிடம்

பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20ல், ஹோல்டரின் ஹாட்ரிக் அசத்தலால் 17 ரன் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும்  தலா 2-2 என சமநிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி டி20 நேற்று  பிரிட்ஜ்டவுனில் நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த வெ.இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் கிங் 34 ரன் (31 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கைல் மேயர்ஸ் 31 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), பூரன் 21 ரன் எடுத்தனர். கேப்டன் போலார்டு 41 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ரோவ்மன் பாவெல் 35 ரன்னுடன் (17 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ரஷித், லிவிங்ஸ்டோன் தலா 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு வின்ஸ் 55 ரன் (35 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), பில்லிங்ஸ் 41 ரன் (28 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நம்பிக்கை அளித்தனர். இங்கிலாந்து 19 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 20 ரன் தேவைப்பட்ட நிலையில், ஜேசன் ஹோல்டர் ஹாட்ரிக் உள்பட 4 பந்தில் 4  விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.இங்கிலாந்து 19.5 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 17 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஹோல்டர் 5, அகீல் 4, ஓடியன் ஸ்மித் ஒரு விக்கெட் எடுத்தனர்.ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை ஹோல்டர் தட்டிச் சென்றார். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடர் (3 போட்டி) மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக. வெ.இண்டீஸ் தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடரில் விளையாட இம்மாதம் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.



from Dinakaran.com |01 Feb 2022 https://ift.tt/jqH4Ihgbv
via IFTTT

Post a Comment

0 Comments