கொல்கத்தா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் தலா 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் அகமதாபாத்தில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து டி20 ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடக்கிறது. முதல் டி20 ஆட்டத்தில் நேற்று முன்தினம் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதனால் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் 2வது டி20 ஆட்டம் இன்று இரவு நடக்கிறது. முதல் ஆட்டத்தில் வென்ற உற்சாகத்தில் ரோகித் தலைமையிலான இந்தியா களம் காண உள்ளது. ரிஷப்பை தவிர மற்றவர்கள் நன்றாக விளையாடியதால் அணியில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில பொல்லார்டு தலைமையிலான வெ.இண்டீஸ் அணியில் மாற்றங்கள் இருக்கலாம். அந்த மாற்றம் இந்தியாவுக்கு சவாலாக இருந்தால் இந்தியாவின் தொடர் வெற்றி தள்ளிப் போகலாம். இல்லாவிட்டால் இந்தியா டி20 தொடரை இன்றே கைப்பற்றக் கூடும். வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் நேற்று தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
from Dinakaran.com |18 Feb 2022 https://ift.tt/mheKVFq
via IFTTT
0 Comments