ஜோதிடம்

* ஸ்டீவ் ஸ்மித் நலம்இலங்கை அணியுடன் நடந்த 2வது டி20 போட்டியில் பீல்டிங் செய்தபோது தலையில் காயம் அடைந்த ஆஸி. நட்சத்திரம் ஸ்டீவன் ஸ்மித் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் 3வது முறையாக ‘மூளை அதிர்ச்சி’ காரணமாக களத்தில் இருந்து வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.* சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைணவ மகளிர் கல்லூரியில் விளையாட்டு வீராங்கனைகளுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்தவர்கள், மேலதிக விவரங்களைப் பெறுவதற்கான மொபைல் எண்:  98407 37407.* இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிரமாகப் பயிற்சி செய்தனர்.* கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ள 2வது மற்றும் 3வது டி20 போட்டிகளுக்கு பிசிசிஐ ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.* இன்று இரண்டாவது ஒருநாள் போட்டிஇந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, குயின்ஸ்டவுன் ஜான் டேவிஸ் ஓவல் மைதானத்தில் இன்று அதிகாலை 3.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசி. 1-0 என முன்னிலை வகிக்கிறது.* முன்னேறுமா தமிழ் தலைவாஸ்புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் இதுவரை 19 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்வி, 6 டிராவுடன் 46 புள்ளிள் பெற்று 9 வது இடத்தில் உள்ளது. முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.



from Dinakaran.com |15 Feb 2022 https://ift.tt/HEYDaFd
via IFTTT

Post a Comment

0 Comments