ஜோதிடம்

சென்னை: ரஞ்சி கோப்பை தொடரில் ஒரே நேரத்தில் அறிமுக வீரர் முச்சதம், 3 இரட்டைச் சதம், 30 சதங்கள் விளாசப்பட்ட அரிய நிகழ்வு நடந்துள்ளது. நடப்பு ரஞ்சி டெஸ்ட் தொடர் சென்னை உட்பட 12 நகரங்களில் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள் களம் காணுகின்றன.  பிப்17ம் தேதி தொடங்கிய முதல்  சுற்றில் பல வீரர்கள் சதம், இரட்டைச் சதங்கள் விளாசி புதிய வரலாறு படைத்துள்ளனர். அறிமுக வீரர்  சாகிப்புல் கனி(பீகார்) முச்சதம் விளாசி உலகச் சாதனை படைத்தார். தமிழக வீரர் ஷாருக்கான்  194ரன்னில் ஆட்டமிழந்தது இரட்டைச் சதம் விளாசும் வாய்ப்பை இழந்தார். இலங்கைக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்த மும்பை அணியின் ரகானே129ரன்னும்,  சவுராஷ்டிரா அணியின் சித்தேஸ்வர் புஜாரா 83பந்தில் 91ரன் விளாசினர். யு-19 அணியின் கேப்டன் யாஷ் துல்(டெல்லி), தருவார் கோஹ்லி(மிசோராம் ஆகியோர் 2 இன்னங்சிலும் சதம் வெளுத்தனர். மேலும் 3 வீரர்கள் இரட்டைச் சதமும்,  30வீரர்கள் சதமும் அடித்துள்ளனர்.



from Dinakaran.com |22 Feb 2022 https://ift.tt/5nNasJe
via IFTTT

Post a Comment

0 Comments