புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை மற்றும் புனே மைதானங்களில் மட்டும் நடைபெற உள்ளது. மும்பை வாங்கடே மைதானத்தில் 20 , பிராபோர்ன் மைதானத்தில் 15, டிஒய் பாட்டீல் மைதானத்தில் 20, புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் 15 என மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்க உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கான மைதானங்கள் உறுதி செய்யப்படவில்லை. இறுதிப் போட்டி மே 29ம் தேதி நடைபெறும். ஒவ்வொரு அணியும் 5 அணிகளுக்கு எதிராக 2 முறை, 4 அணிகளுக்கு எதிராக ஒரு முறை என 14 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளன.
from Dinakaran.com |26 Feb 2022 https://ift.tt/VNUJh4B
via IFTTT
0 Comments