ஜோதிடம்

* ஆஸ்திரேலியாவில் 2020-21ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. முதல் டெஸ்ட்டில் 36ரன்னில் சுருண்ட இந்தியாவின் தோல்விக்கு பிறகு, கேப்டன் கோஹ்லி விடுமுறையில் நாடு திரும்பினார். எஞ்சிய 4 டெஸ்டகளுக்கு அஜிங்கிய ரகானே கேப்டனாக இருந்து வழி நடத்தினார். இப்போது டெஸ்ட் அணியில் ரகானேவின் இடம் கேள்விக் குறியாகி உள்ளது. அதனால்  ரஞ்சி தொடரில் மீண்டும் மும்பை அணிக்காக களம் காண உள்ளார். இந்நிலையில் நேற்று பேட்டி ஒன்றில் ‘ஆஸி தொடரில் நான் எடுத்த முடிவுகளுக்கான, அதனால் கிடைத்த வெற்றிகளுக்கான பெருமையும், பலனும் வேறு யாருக்கோ கிடைத்தது’ என்று வருந்தியுள்ளார்.* தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் ஆடவர் புரோ லீக் ஹாக்கித் தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா 10-2 என்ற கணக்கில் கோல் மழை பொழிந்து தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.  ஏற்கனவே முதல் ஆட்டத்தில் பிரான்சை 5-0என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, நாளை மீண்டும் பிரான்சுடன் மோத உள்ளது.* ஐபிஎல் போட்டியின் நடப்புத் தொடருக்கான புதிய சீருடையை   சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  அறிமுகப்படுத்தியுள்ளது.* தடுப்பூசி பிரச்னை காரணமாக ஆஸி ஓபனில் ஆடவிடாமல் வெளியேற்றப்பட்ட செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் இம்மாதம் துபாய் ஓபனில் விளையாடுவதை உறுதிச் செய்தார். இந்நிலையில் அடுத்தமாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள ‘இந்தியன்வெல்ஸ் ஓபன்’ டென்னிஸ் தொடரில் விளையாடும் வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் இடம் பிடித்துள்ளார். இண்டியன் வெல்ஸ் ஓபனில் ஜோகோவிச் 5 முறை சாம்பியன் வென்றுள்ளார்.*  யு-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் விரைவில் நடைபெற உள்ள ரஞ்சி தொடரில் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.* இந்தியாவுக்கு எதிரான தொடரில் அசத்தி வரும்  வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்  ஓடியன் ஸ்மித், சில நாட்களில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் 5 கோடி வரை ஏலம் போவார்’ என்று முன்னாள் வீரர்  ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.* ரஷ்யாவில் நடைபெறும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மகளிர் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் முன்னணி வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவித்தோவாவை(23வது ரேங்க்),6-4, 6-0 என நேர் செட்களில்  வீழ்த்திய  ருமேனியா வீராங்கனை இரினா பெகு(56வது ரேங்க்)  காலிறுதிக்கு முன்னேறினார். * இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில்  மான்செஸ்டர் சிட்டி அணி நேற்று 2-0 என்ற கோல் கணக்கில்  பிரென்ட்ஃபோர்டு அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.



from Dinakaran.com |11 Feb 2022 https://ift.tt/5eZKJIn
via IFTTT

Post a Comment

0 Comments