ஜோதிடம்

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் மெகா ஏலத்தில் பங்கேற்க 590 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலை ₹2 கோடி பிரிவில் சுழல் நட்சத்திரம் ஆர்.அஷ்வின் உள்பட 48 பேர் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம், பெங்களூருவில் பிப். 12, 13 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக 1214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 590 பேர் அடங்கிய இறுதிப் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதிகபட்ச அடிப்படை விலையாக ₹2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் அஷ்வின், வார்னர், போல்ட், தவான், டி காக், டு பிளெஸ்ஸி உள்பட 48 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.ரூ.1.5 கோடி அடிப்படை விலை பிரிவில் ஷிம்ரோன் ஹெட்மயர் (வெ.இண்டீஸ்), வாஷிங்டன் சுந்தர் (இந்தியா) உள்பட 20 வீரர்களும், ₹1 கோடி பிரிவில் 34 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இறுதிப் பட்டியலில் 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன், வேகப் பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர் என தனித்தனியே ஏலம் நடைபெறும். அனுபவ வீரர்கள் தினேஷ் கார்த்திக், டுவைன் பிராவோ, சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா போன்றவர்களுடன், புதுமுக வீரர்களான தென் ஆப்ரிக்காவின் 18 வயது டிவால்ட் பிரெவிஸ், வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஓடியன் ஸ்மித் ஆகியோரும் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த அதிரடி வீரர் ஷாருக் கானுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் கணிசமான தொகைக்கு மீண்டும் ஒப்பந்தம் செய்ய முன்வந்த நிலையில், ஏலத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ள அவர் தனது அடிப்படை விலையை ₹20 லட்சத்திலிருந்து ₹40 லட்சமாக அதிகரித்துள்ளார்.



from Dinakaran.com |02 Feb 2022 https://ift.tt/TZrfM5ulI
via IFTTT

Post a Comment

0 Comments