ஜோதிடம்

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறி உள்ள இந்திய வீரர் லக்‌ஷியா சென், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை உறுதி செய்து அசத்தியுள்ளார். காலிறுதியில் லக்‌ஷியாவுடன் (20 வயது) மோதவிருந்த லு குவாங் ஸு காயம் காரணமாக விலகியதை அடுத்து, அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலமாக லக்‌ஷியா இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த இந்தியா ஓபனில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்த லக்‌ஷியா, தற்போது ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பிலும் பதக்கத்தை வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.



from Dinakaran.com |19 Mar 2022 https://ift.tt/3ZhtmnW
via IFTTT

Post a Comment

0 Comments