மவுன்ட் மவுங்கானுயி: ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரின் 9வது லீக் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்கா 6 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்கா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்தது. அந்த அணியின் லாரா வுல்வார்ட் 75, கேப்டன் சுனே லுவஸ் 62, திரிஷா செட்டி, க்ளோ டிரையன் தலா 31 ரன் விளாசினர். பாக். தரப்பில் பாத்திமா சனா, குலாம் பாத்திமா தலா 3 விக்கெட் அள்ளினர்.அடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாக். அணி 49.5 ஓவரில் 217 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. நஹிதா 40, ஒமைமா 65, நிடா தர் 55 ரன் விளாச, மற்ற வீராங்கனைகள் சொற்பர ரன்னில் வெளியேறினர் (3 பேர் டக் அவுட்). விறுவிறுப்பான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா 6 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. தெ.ஆப்ரிக்கா தரப்பில் 3 விக்கெட் வீழ்த்திய ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
from Dinakaran.com |12 Mar 2022 https://ift.tt/SpGlO6L
via IFTTT
0 Comments