ஜோதிடம்

ஹாமில்டன்: மரிசன்னே காப் உதவியுடன் மகளிர் உலக கோப்பையில் முதல்முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா சாதனை வெற்றியை பெற்றுள்ளது. ஐசிசி மகளிர் உலக கோப்பையில் 16வது லீக் ஆட்டத்தில் நேற்று  நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் களமிறங்கியது. சூசி பேட்ஸ் 4ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் பொறுப்புடன் விளையாடி சதத்தை நெருங்கிய கேப்டன் ஷோபி 93ரன்னிலும், அரைசதம் அருகில் சென்ற அமிலியா 42ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  இருவரும் 2 வது விக்கெட்டுக்கு 81ரன் சேர்த்தனர். அடுத்து மேடி கிரீன் 30, புரூக் ஹல்லிடே 24 என சொல்லிக் கொள்ளும்படி ரன் எடுத்தனர். ஒருக்கட்டத்தில் 40.2ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 198ரன் எடுத்திருந்த நியூசி, அடுத்த 30ரன் சேர்ப்பதற்குள் 6விக்கெட்களை இழந்தது. அந்த அணி 47.5ஓவரில் 228ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தெ.ஆப்ரிக்கா அணியின் ஷப்னிம், காகா தலா 3, மரிசன்னே காப் 2 விக்கெட் அள்ளினர். அதனையடுத்து 229ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தெ.ஆப்ரிக்கா களம் கண்டது. நியூசியை போலவே தெ.ஆப்ரிக்காவும் ஆரம்பித்தில் சீராக ரன் குவிக்க ஆரம்பித்தது. லாரா 67, கேப்டன் சூனே 51 ரன் விளாச ரன் உயர்ந்தது. ஆனால் மற்றவர்கள் குறைந்த ரன்னில் பெவிலியன் திரும்ப ஆரம்பிக்க தெ.ஆப்ரிக்க வெற்றி கேள்விக் குறியானது. ஆனால் களத்தில் இருந்த காப் கடைசி ஓவர் வரை களத்தில் நின்று போராடி வெற்றியை உறுதி செய்தார். அதனால் தெ.ஆப்ரிக்கா 49.3ஓவரில் 8 ஒவர் இழப்புக்கு 229ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. காப் 35பந்தில் 34*ரன் விளாசி களத்தில் இருந்தார். நியூசி தரப்பில் அமிலியா 3, பிரான்ஸஸ் மாக்கே 2 விக்கெட் எடுத்தனர். காப் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். உலக கோப்பையில் முதல் முறையாக நியூசியை வீழத்தி, புதிய சாதனையை தெ.ஆப்ரிக்கா நேற்று படைத்தது.



from Dinakaran.com |18 Mar 2022 https://ift.tt/3ex0kzM
via IFTTT

Post a Comment

0 Comments