ஜோதிடம்

* இந்திய வாலிபால் அணியின் முன்னாள் வீரரும், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கே.சித்திரைப்பாண்டியன் முதலாமாண்டு நினைவு நிகழ்ச்சி கைப்பந்து சங்கங்கள் மற்றும் நெல்லை நண்பர்கள் குழு சார்பில் எழும்பூரில் நேற்று நடைபெற்றது. * ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசனில் களமிறங்க உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தனது வீரர்களுக்கான புதிய சீருடையை நேற்று அறிமுகம் செய்துள்ளது.* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் பேப் டு பிளெஸ்ஸி (37 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். மெகா ஏலத்தில் இவரை ரூ.7 கோடிக்கு ஆர்சிபி வாங்கியிருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற டு பிள்எஸ்சி, இதுவரை 100 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 2935 ரன் விளாசியுள்ளார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக மொத்தம் 633 ரன் அடித்தது குறிப்பிடத்தக்கது. டுபிளெஸ்ஸிக்கு ஆர்சிபி அணி முன்னாள் கேப்டன் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |13 Mar 2022 https://ift.tt/DF6zcnL
via IFTTT

Post a Comment

0 Comments