ஜோதிடம்

சென்னை மாவட்ட கால்பந்து சங்கத்தின் முன்னாள் நிர்வாகியும், ஜார்ஜ் டவுன் கால்பந்து கிளப் உட்பட முக்கிய கால்பந்து கிளப்களுக்காக விளையாடியவர் டி.ஜான் (99). முதுமை காரணமாக  ஜான் நேற்று காலமானார். உள்ளூர் கிளப்களுக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். கூடவே  ஃபிபா அங்கீகாரம் பெற்ற  தன்னா்வலராக சர்வதேச ஆட்டங்களின்போது பணியாற்றி இருக்கிறார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு கால்பந்து சங்க முன்னாள் செயலாளர்  ரவிகுமார் டேவிட் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.* மகளிர் ஹாக்கி‘வீ ஆர் ஃபார் ஹாக்கி கிளப்’  சார்பில்  போரூரில் 3வது மாநில அளவிலான மகளிர் ஹாக்கிப் போட்டி நடைபெற உள்ளது. மார்ச் 12, 13 தேதிகளில் நடக்கும் இந்தப்போட்டியில் மொத்தம் 17 அணிகள் இதுவரை பதிவு செய்துள்ளன. வெற்றி பெறும் அணிக்கு ‘வீ ஆர் ஃபார் ஹாக்கி’ கோப்பையுடன் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும். 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம், 3ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.* சென்னை ஹேண்ட்பால் அணி தேர்வுதமிழக ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 18வது மாநில அளவிலான ஜூனியர் ஹேண்ட்பால் போட்டி திருவண்ணாமலை மாவட்டம் வடாண்டபட்டில் இம்மாதம் 12, 13 தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான சென்னை மாவட்ட அணிகளை தேர்வு செய்வதற்கான முகாம் நேற்று நடந்தது. நேரு அரங்கில் நடந்த இந்த முகாமில் 50 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு அணிகளாக மோதினர். அவற்றில்  சிறப்பாக விளையாடிய 16 பேரை சென்னை அணிக்காக தேர்வு செய்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்களுடன் ஹேண்ட்பால் சங்க நிர்வாகிகள்.* தமிழக அணிக்கு வெள்ளிஐதராபாத்தில் தென் மண்டல அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதன் சீனியர் கட்டா குழு பிரிவில் பங்கேற்ற தமிழக வீரர்கள் பொன்மணிகண்டன், நவீன், பிரவீன் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.* பவுலிங்கில் அசத்தும் மிருணாளினிஅயர்ன் லேடி கோப்பை  கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் சென்னையில் சமீபத்தில்  நடந்தது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப்களின் அணிகள் பங்கேற்றன. அதில் கிரேசி லெவன் அணிக்காக விளையாடும் ஆல்ரவுண்டர் பி.மிருணாளினி (எத்திராஜ் கல்லூரி மாணவி), சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான தொடரின் பைனலில் மகளிர் கிறித்துவக் கல்லூரிக்கு எதிராக சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். இந்நிலையில், ஹன்ட்டர் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில்  அப்துல் மாலிக் கிரிக்கெட் அகடமிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 4 ஓவர்கள் வீசி 8 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் அள்ளினார்.* நீச்சல் வீரருக்கு பாராட்டுசென்னை வேளச்சேரியில் மாற்றுத் திறானாளிகள் பங்கேற்ற  மாநில அளவிலான 7வது பாராலிம்பிக் நீச்சல் போட்டி நடந்தது. அதில் சென்னை வீரர் தினேஷ் குமார் 3 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். வேளச்சேரி நீச்சல் வளாகத்தில் பயிற்சி பெற்று வரும் தினேஷ்குமாரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதுநிலை மேலாளர் வீரபத்திரன், அரங்க அலுவலர் பிரேம்குமார் ஆகியோர் பாராட்டினர்.சர்வதேச கைப்பந்து வீரர் சித்திரை பாண்டியன்  நினைவு கோப்பையின் மாநில அளவிலான முதல் வாலிபால் தொடர் சென்னையில் நடந்தது. அதன் ஆடவர், மகளிர் பிரிவுகளில் முதலிடம் பிடித்த எஸ்ஆர்எம்ஐஎஸ்டி கல்லூரி அணிகளுக்கு நினைவுக் கோப்பையும், தலா ரூ.30ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. மகளிர் பிரிவில் கோபி செட்டிபாளையம்  பிகேஆர், ஆத்தூர் பாரதியார் ஆகிய அணிகளும், ஆடவர் பிரிவில்  பொள்ளாச்சி எஸ்டிசி, சென்னை டிஜி வைணவக் கல்லூரி ஆகியவையும் முறையே 2, 3வது இடங்களை பிடித்தன. இந்த அணிகளுக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன், சிறப்பு விருந்தினர்கள் எல்.வெங்கடசாமி, ஆர்.கே.துரைசிங், கைப்பந்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.



from Dinakaran.com |08 Mar 2022 https://ift.tt/ioIQkfF
via IFTTT

Post a Comment

0 Comments