ஜோதிடம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா முதல் முறையாக 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. கிரிக்கெட் நட்சத்திரம் தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பாலிகல் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்தும், கலப்பு இரட்டையர் பிரிவில் சவுரவ் கோஷலுடன் இணைந்தும் 2 சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி அசத்தினார். சுமார் 4 ஆண்டுகள் ஸ்குவாஷ் விளையாட்டில் இருந்து விலகியிருந்ததுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான தீபிகா, மீண்டும் களமிறங்கி தங்கப் பதக்கங்களை முத்தமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



from Dinakaran.com |11 Apr 2022 https://ift.tt/LTlqHP4
via IFTTT

Post a Comment

0 Comments