தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் மகளிர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. டி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி ஜெர்மனி, மலேசியா, வேல்ஸ் அணிகளை வென்று முதல் இடம் பிடித்தது. காலிறுதியில் தென் கொரியாவை வீழ்த்திய இந்தியா, அரையிறுதியில் நெதர்லாந்திடம் போராடி தோற்றது. மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனியிடம் இங்கிலாந்து தோற்றது. வெண்கலப் பதக்கத்துக்காக நேற்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. 18வது நிமிடத்தில் இங்கிலாந்தின் மில்லி ஜிக்லியோ கோல் அடித்தார். இந்தியாவின் மும்தாஜ் கான் 21வது நிமிடத்திலும், 47வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடிக்க, இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டது.
from Dinakaran.com |13 Apr 2022 https://ift.tt/lhQ6ojn
via IFTTT
0 Comments