
சென்னை: தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இன்று இரவு திடீர் மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில், அதற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.
இன்று இரவு தமிழகத்தின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் திடீர் மின்வெட்டு நிகழ்ந்தது. மாவட்டங்கள் பலவற்றில் இரவு 8 மணியளவில் தொடங்கிய மின்வெட்டு இரண்டு மணிநேரங்கள் வரை நீடித்தது. சில இடங்களில் மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது. கடலூர், விருத்தாசலம் , காரைக்குடி, கரூர், திருவண்ணாமலை, விருதுநகர், கன்னியாகுமரி என பல மாவட்டங்களில் இதே நிலை ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/05sobqf
0 Comments