ஜகர்தா: ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் நடக்கிறது. ஆசியாவின் 8 மு ன்னணி அணிகள் பங்கேற்கும் இந்தப்போட்டியில், லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடித்த ஜப்பான், மலேசியா, கொரியா, இந்தியா உட்பட 4 அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. நடப்பு சாம்பியனாக இருந்தாலும் கேப்டன் ரூபிந்தர்பால் சிங் காயம், முன்னணி வீரர்கள் புரோ லீக் போட்டிக்கு பயணம், புதுமுக வீரர்கள் அதிகம் ஆகிய காரணங்களால் இந்தியாவின் சூப்பர்-4 சுற்று வாய்ப்பு கேள்விக் குறியாக இருந்தது. ஆனால் கடைசி ஆட்டத்தில் 16 கோல் அடித்தால்தான் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை. அதையும் செய்து அசத்தியது.இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தியது. ஆனால் 2வது ஆட்டத்தில் மலேசியா உடன் டிரா செய்தது. ஒவ்வொரு அணியும் தலா 2 ஆட்டங்கள் ஆடியுள்ள நிலையில் இந்தியா ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. அதே 4 புள்ளிகளை பெற்றுள்ள கொரியா கோல்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளது. சூப்பர்-4 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்டத்தில் விளையாடும்.சூப்பர்-4ன் கடைசிச் சுற்று இன்று நடக்கிறது. அதில் இந்தியா-கொரியா அணிகள் மோத உள்ளன. அதில் வெற்றிப் பெற்றால் இந்தியா பட்டியலில் முதல் இடம் பிடித்து பைனலுக்கு எளிதில் முன்னேறிவிடும். மாறாக ஆட்டம் டிராவில் முடிந்தால், மலேசியா-ஜப்பான் இடையிலான ஆட்டத்தின் முடிவு முக்கியமாக இருக்கும். மலேசியா வெற்றிப் பெற்றால் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கலாம். அதே நேரத்தில் ஜப்பான் வெற்றிப் பெற்றால் ஜப்பான், மலேசியா அணிகள் போட்டியில் இருந்து வெளியேறும். அதனால் இந்தியா, கொரியா அணிகள் பைனலில் மோதும். எப்படி பார்த்தாலும், இந்தியா இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது
from Dinakaran.com |31 May 2022 https://ift.tt/gOQyW4I
via IFTTT
0 Comments