ஜோதிடம்

* 5000 மீட்டர் ஓட்டம் அவினாஷ் அசத்தல்அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த சவுண்ட் ரன்னிங் தடகள போட்டித் தொடரின் ஆண்கள் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற இந்திய வீரர் அவினாஷ் சபல் (27 வயது), தேசிய சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். பந்தய தூரத்தை 13 நிமிடம், 25.65 விநாடிகளில் கடந்த அவர் 12வது இடத்தை பிடித்தார். பதக்கம் வெல்லவில்லை என்றாலும், இந்த பிரிவில் பகதூர் பிரசாத்தின் 30 ஆண்டு தேசிய சாதனையை (13:29.70 வி.) அவினாஷ் முறியடித்தார். 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவிலும் இவர் தேசிய சாதனை படைத்துள்ளார். 3000 மீ, 5000 மீ. மற்றும் அரை மாரத்தான் என 3 பிரிவுகளில் அவினாஷ் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ளவும் (ஜூலை 15-24) தகுதி பெற்றுள்ளார்.* ரன் அவுட்டால் பின்னடைவு...கடைசி ஓவரில் 9 ரன்னை எப்போதும் எடுப்போம். ஆனால், இந்த ஆட்டத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 ரன் அவுட் நிலைமையை மாற்றிவிட்டது. டி20 கிரிக்கெட்டில் இது கடினமானது. அது உங்களை பின்னோக்கித் தள்ளிவிடும். நாங்கள் 19.2 ஓவர் வரை நன்றாகவே விளையாடினோம். முதலில் சொன்னது போல் விக்கெட்கள் இழந்ததுதான் பிரச்னை. அதே நேரத்தில் அவர்கள் ஆரம்பத்தில் ஆடிய விதத்தை பார்க்கும்போது 200க்கு மேல் ரன் குவிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால், எங்கள் பந்து வீச்சாளர்கள் அவர்களை கட்டுப்படுத்தினர். - குஜராத் கேப்டன் ஹர்திக்* வெற்றிக்கு எல்லோரும் காரணம்...இறுதிக்கட்ட ஆட்டம் இறுக்கமாக இருந்தது. எனினும், போராடி வென்றது மிகவும் மனநிறைவாக உளளது. இதைதான் எதிர்பார்த்து காத்திருந்தோம். ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டம் வந்தது. இந்த வெற்றியை இரு கைகளிலும் ஏந்துவோம். வெற்றிக்கு எல்லோரும் காரணம். பேட்டிங்கில்  இன்னும் 15, 20 ரன் குவித்திருக்கலாம். அதற்கேற்பதான் தொடங்கினோம். இடையில் நிலைமை மாறி விட்டது. அவர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். மெதுவாக வீசி எங்களை திணறடித்தனர்.  டிம் டேவிட் எங்கள் தரப்பில் மிகச் சிறப்பாக விளையாடினார். எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது கடினமானது என்பதை உணர்ந்துதான் களத்தில் இருந்தோம். எங்கள் உணர்வுக்கு ஏற்ப முடிவு இருந்தது. அதிர்ஷ்டவசமாக எங்களிடம் இருந்த ஆதாரங்களை நான் சரியாகப் பயன்படுத்தினேன். பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பங்களித்தனர்.குறிப்பாக, கடைசி ஓவரில் டானியல் சாம்ஸ் அற்புதமாகப் பந்து வீசினார். - மும்பை கேப்டன் ரோகித்



from Dinakaran.com |08 May 2022 https://ift.tt/XiNt9lj
via IFTTT

Post a Comment

0 Comments