ஜோதிடம்

* தென் ஆப்ரிக்க அணியுடன் நடைபெற உள்ள டி 20 தொடரில் (5 போட்டி) கேப்டன் ரோகித் உள்பட பல சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதை அடுத்து, இந்திய அணிக்கு ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா தலைமை பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.* சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அடுத்த ஆண்டு அங்கு நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் இறுதிச் சுற்று ஆட்டங்களை நடத்த முடியாது என சீன கால்பந்து சங்கம் கை விரித்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.* இலங்கை போராட்டக் களமாக மாறியுள்ள நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூலை - ஆகஸ்டில் அங்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உறுதியாக உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.* ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டித் தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் 8 தங்கம், 8 வெள்ளி என மொத்தம் 16 பதக்கங்களை அள்ளி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.



from Dinakaran.com |15 May 2022 https://ift.tt/mzlvRjQ
via IFTTT

Post a Comment

0 Comments