புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாட உள்ள தென் ஆப்ரிக்க அணி, நாளை டெல்லி வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி டெல்லியில் ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து கட்டாக் (ஜூன் 12), விசாகப்பட்டணம் (ஜூன் 14), ராஜ்கோட் (ஜூன்) மற்றும் பெங்களூருவில் (ஜூன் 19) போட்டிகள் நடைபெற உள்ளன. தென் ஆப்ரிக்க அணி வீரர்கள் நாளை வர உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் ஜூன் 5ம் தேதி டெல்லி வருகின்றனர். கேப்டன் ரோகித், கோஹ்லி, பும்ரா உள்பட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்குகிறது. இந்த தொடரின்போது, ஸ்டேடியங்களில் 100 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
from Dinakaran.com |01 Jun 2022 https://ift.tt/nG1rk2K
via IFTTT
0 Comments