ஜோதிடம்

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் அபாரமாகப் பந்துவீசிய மும்பை வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட் கைப்பற்றி  அசத்தினார். டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். வெங்கடேஷ் அய்யர், அஜிங்க்யா ரகானே இருவரும் கேகேஆர் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. வெங்கடேஷ் 43 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கார்த்திகேயா பந்துவீச்சில் சாம்ஸ் வசம் பிடிபட்டார்.ரகானே 25 ரன் எடுத்து கார்த்திகேயா சுழலில் கிளீன் போல்டானார். நிதிஷ் ராணா ஒரு முனையில் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட... கேப்டன் ஷ்ரேயாஸ் 6 ரன், ஆந்த்ரே ரஸ்ஸல் 9 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ராணா 43 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வசம் பிடிபட்டார்.பும்ரா வீசிய 18வது ஓவரில் ஷெல்டன் ஜாக்சன் (5 ரன்), பேட் கம்மின்ஸ் (0), சுனில் நரைன் (0) விக்கெட்டை பறிகொடுத்தனர். சாம்ஸ் வேகத்தில் சவுத்தீ டக் அவுட்டாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது. ரிங்கு சிங் 23 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), வருண் சக்ரவர்த்தி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.மும்பை பந்துவீச்சில் பும்ரா 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட வெறும் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். குமார் கார்த்திகேயா 2, சாம்ஸ், எம்.அஷ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.காயத்தால் விலகினார் சூரியகுமார்: மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். மே 6ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தின்போது, அவரது இடது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் ‘ஸ்கை’ விளையாட மாட்டார் என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது.



from Dinakaran.com |10 May 2022 https://ift.tt/OF5InGw
via IFTTT

Post a Comment

0 Comments