ஜோதிடம்

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. லெஸ்டர்ஷயர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய ரோகித் முதல் இன்னிங்சில் 25 ரன் எடுத்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அந்த போட்டியில் ரோகித் களமிறங்குவது கேள்விக்குறியாகி உள்ளது. ரோகித் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் அல்லது பும்ரா கேப்டனாக செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



from Dinakaran.com |27 Jun 2022 https://ift.tt/PGdeoDf
via IFTTT

Post a Comment

0 Comments