IND vs IRE | சஞ்சு சாம்சன் விளையாடுகிறார் என ஹர்திக் சொன்னதும் ஆரவாரம் செய்த ரசிகர்கள்: கவனம் ஈர்க்கும் வீடியோ

டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி சார்பில் சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் களம் கண்டுள்ளார். அது குறித்த அறிவிப்பை டாஸின் போது கேப்டன் ஹர்திக் பாண்டியா சொன்னதும் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். அந்த வீடியோ கவனம் ஈர்த்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்துகிறார். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது போட்டி ‘தி வில்லேஜ்’ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments