கோலாலம்பூர்: மலேசியா ஓபன் சூப்பர் 750 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து போராடி தோற்றார். காலிறுதியில் சீன தைபே வீராங்கனை டாய் ட்ஸூ யிங்குடன் நேற்று மோதிய சிந்து (7வது ரேங்க்) 21-13 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த டாய் ட்ஸூ யிங் (2வது ரேங்க்) 13-21, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேற, சிந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். டாய் ட்ஸூ டோக்கியோ ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். சிந்துவுடன் 21 முறை மோதியுள்ள டாய் ட்ஸூ 16 வெற்றிகளை வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
from Dinakaran.com |02 Jul 2022 https://ift.tt/57cx8QK
via IFTTT
0 Comments