ஜோதிடம்

லண்டன்: இங்கிலாந்து - இந்தியா மோதும் முதல் ஒருநாள் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மாலை 5.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்து  சென்றுள்ள இந்தியஅணி கடைசி மற்றும் 5வது டெஸ்டில் (ஒத்திவைக்கப்பட்ட போட்டி) தோற்றதால், அந்த தொடர் 2-2 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த டி20 தொடரை இந்தியா  2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. 2வது போட்டி ஜூலை 14ல் லார்ட்ஸ் அரங்கிலும், கடைசி போட்டி மான்செஸ்டரிலும் (ஜூலை 17) நடக்க உள்ளன. டி20 தொடரை கைப்பற்றியதால் இந்திய வீரர்கள் உற்சாகமாகவே களமிறங்குகின்றனர். ஒருநாள் உலக கோப்பைத் தொடரின்  நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, 2021ல் இந்தியாவிடம் தொடரை இழந்தது. அதன் பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடர்களில் ஒயிட்வாஷ் செய்து அசத்தியதால் அந்த அணியும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளது. இரு அணிகளுமே வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.இந்தியா: ரோகித் (கேப்டன்), அர்ஷ்தீப், பும்ரா, சாஹல், தவான், இஷான், ஷ்ரேயாஸ், ஜடேஜா, கோஹ்லி, ஷமி, சிராஜ், ஹர்திக், ரிஷப், அக்சர், பிரசித், ஷர்துல், சூரியகுமார்.இங்கிலாந்து: பட்லர் (கேப்டன்), மொயீன், பேர்ஸ்டோ, புரூக், கார்ஸ், சாம் கரன், லிவிங்ஸ்டன், ஓவர்ட்டன், பார்கின்சன், ஜோ ரூட், ஜேசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி.



from Dinakaran.com |12 Jul 2022 https://ift.tt/OLmQqhT
via IFTTT

Post a Comment

0 Comments