ஜோதிடம்

ஐரோப்பிய, அமெரிக்க  நாடுகளில் ஆடவர்களுக்கான  கால்பந்து தொடர்கள் முடிந்து, அடுத்த தொடருக்கு வீரர்கள் தக்க வைக்கும், வாங்கும், விடுவிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.  இதற்கிடையில் உலகம் முழுவதும் மகளிர் கால்பந்து ஆட்டங்கள் களை கட்டி வருகின்றன. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளதால், இந்தப்போட்டிகளில் கால்பந்து உலக ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் போட்டிகளில் நேற்று....பைனலில் அமெரிக்கா-கனடா மகளிர்: வட, மத்திய  அமெரிக்கா, கரீபியன் நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கான்காகேப் மகளிர் தங்கக் கோப்பை  மெக்சிகோவில்  நடக்கிறது. அதன் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று  நடந்தன. முதல் அரையிறுதியில்  அமெரிக்கா ஒன்றிய மகளிர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டரிகாவையும், .மற்றொரு அரையிறுதியில்  கனடா 3-0 என்ற கோல் கணக்கில்  ஜமைக்கா மகளிரையும் வென்று பைனலுக்கு முன்னேறின.இத்தாலி-ஐஸ்லாந்து டிரா: இங்கிலாந்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில்  மகளிருக்கான  யுரோ கோப்பை-2022  கால்பந்து போட்டி நடக்கிறது. அதில் நேற்று நடந்த டி  பிரிவு  ஆட்டத்தில் ஐஸ்லாந்து-இத்தாலி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.



from Dinakaran.com |16 Jul 2022 https://ift.tt/aACnLpx
via IFTTT

Post a Comment

0 Comments