* உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஹாக்கி இந்தியா நிர்வாக குழுவின் ஜாபர் இக்பால், ‘ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் தேர்தல் 2 மாதங்களில் நடத்தி முடிப்போம். அதன் பிறகு 2023ல் ஆடவர் உலக கோப்பை நடத்துவதற்கான பணிகளை விரைவு படுத்துவோம்’ என்று கூறியுள்ளார்.* வெ.இண்டீஸ்-இந்தியா இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ள போர்ட்-ஆப்-ஸ்பெயினில் நேற்று கன மழை பெய்தது. அதனால் வீரரர்கள் உள்ளரங்கில் பயிற்சி பெற்றனர்.* ஜெர்மனியின் மியூனிகில் நேற்று முடிந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியர்கள் 6தங்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.* இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட டென்னிஸ் வீரர் சுமீத் நாகல் குணமடைந்துள்ளார். அதனால் டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட உள்ளார்.* ‘‘பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் எதையும் இலகுவாக, பதட்டமில்லாமல் அணுகும் ‘மிஸ்டர் கூல்’ என்ற சொல்லுக்கு பொறுத்தமானவராக இருக்கிறார்’’ என்று முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் கூறியுள்ளார். * காமன் வெல்த் போட்டியில் பளு தூக்கும்(49கிலோ) பிரிவில் பங்கேற்க உள்ள மீராபாய் சானு, ‘பயிற்சியின் போது எனது குறைகளை களைந்து மேம்படுத்திக் கொள்வதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்’ என்று தெரிவிக்கிறார்.
from Dinakaran.com |22 Jul 2022 https://ift.tt/TgO4Leo
via IFTTT
0 Comments