ஜோதிடம்

* யோனக்ஸ் தைபே ஓபன் பேட்மின்டன்தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் இஷான் பட்நாகர் - தனிஷா க்ரஸ்டோ  இணை 21-15, 21-8 என்ற நேர் செட்களில் இஸ்ரேலின்  மிஷா ஜில்பெர்மன் - ஸ்வெட்லனா ஜில்பெர்மன் இணையை வீழ்த்தியது. இப்போட்டி 26 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.* தென் ஆப்ரிக்காவில் நடைபெற உள்ள புதிய உள்ளூர் டி20 தொடரில் களமிறங்கும் 6 அணிகளையும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023 ஜனவரில் தொடங்க உள்ள இத்தொடரில் ஜோகன்னஸ்பர்க் (சிஎஸ்கே), கேப் டவுன் (ரிலையன்ஸ்), போர்ட் எலிசபத் (சன் குழுமம்), டர்பன் (கோயங்கா குழுமம்), பார்ல் (ராஜஸ்தான் ராயல்ஸ்), பிரிடோரியா (ஜிண்டால்) அணிகள் விளையாட உள்ளன. * இங்கிலாந்து அணிக்கு எதிராக செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் வாண்டெ டுஸன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஜானேமன் மலான் 57 ரன், மார்க்ரம் 77 ரன் விளாசினர். * பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆஸம், டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன் என்ற சாதனை மைல் கல்லை நேற்று கடந்தார். டெஸ்ட் போட்டிகளில் தனது 22வது அரை சதத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.  



from Dinakaran.com |20 Jul 2022 https://ift.tt/fLYCOQT
via IFTTT

Post a Comment

0 Comments