ஜோதிடம்

* சர்வதேச டி20ல் மிகக் குறைந்த  வயதில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமை பிரான்சின் குஸ்டாவ் மெக்கியோனுக்கு (18 ஆண்டு, 280 நாள்). சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஐசிசி டி20 உலக கோப்பை ஐரோப்பிய  தகுதிச்சுற்று பி பிரிவு ஆட்டத்தில், பிரான்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. தொடக்க வீரர் மெக்கியோன்  109 ரன் (61 பந்து, 5 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி இந்த சாதனை யை நிகழ்த்தி உள்ளார். முன்னதாக, 2019ல் ஆப்கானிஸ்தானின் ஹசரதுல்லா  (20 ஆண்டு 337 நாள், 62 பந்தில் 162* ரன்) படைத்த சாதனையை மெக்கியோன் முறியடித்தார்.* செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரின் தொடக்க விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.* பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீராங்கனைகள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானதை அடுத்து அவர்கள் இருவரும் இங்கிலாந்து பயணத்தை ஒத்திவைத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.* சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடருக்கு வாழ்த்து தெரிவித்து ‘செஸ் ஒலிம்பியாட் தமிழ்நாட்டின் பெருமை’ என்ற தலைப்பிலான வீடியோவை மலபார் கிறித்துவக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் எம்.சி.வசிஷ்ட் மற்றும் மாணவிகள் வெளியிட்டுள்ளனர்.* 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலக கோப்பை போட்டித் தொடரை நடத்துவதற்கான உரிமம் பெற ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் விண்ணப்பித்துள்ள நிலையில், போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும் என பிசிசிஐ தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |27 Jul 2022 https://ift.tt/GPnHWaV
via IFTTT

Post a Comment

0 Comments