ஜோதிடம்

சென்னை: மாலத்தீவில்  54வது மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டி நடந்தது. அதில் இந்தியா சார்பில்  பங்கேற்ற தமிழக வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர். மாற்றுத்திறனாளிக்கான  பாரா பிரிவில் சுரேஷ் தங்கம் வென்றார்.  மேலும்  ஜூனியர் பிரிவில் மற்றொரு சுரேஷ், 70 கிலோ எடை பிரிவில்  ஹரிபாபு, 90 கிலோ  எடை பிரிவில்  சரவணன், 100கிலோ எடை பிரிவில் கார்த்திகேசுவர் ஆகியோர் தலா  ஒரு   தங்கம் வென்றனர். அதேபோல் விக்னேஷ்(70கிலோ), ராஜ்குமார்(100+),  புருஷோத்தமன்(40-49வயது) ஆகியோர் தலா ஒரு வெண்கலமும்,   ரத்தினம்(60+) வெள்ளிப் பதக்கமும்   கைப்பற்றினர். கூடவே  50-59வயது பிரிவில் ஸ்டீபன் 4ம் இடமும், பிஸிக்  பிரிவில் கார்த்திராஜ் 5வது இடமும் பெற்றனர்.  இவர்களுடன் சென்னை திரும்பிய  தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் செயலாளரும், அணியின் பயிற்சியாளருமான  அரசு ஆகியோருக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



from Dinakaran.com |23 Jul 2022 https://ift.tt/KApx52J
via IFTTT

Post a Comment

0 Comments