ஜோதிடம்

ஓரிகான்: 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லாலின் உலக சாதனை படைத்தார். ஓரிகானில் நேற்று மகளிர் பிரிவில் 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி நடந்தது. இதில் 22 வயதான அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லாலின் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் 2 முறை ஒலிம்பிக் சாம்பியனான சிட்னி மெக்லாலின் இந்த தூரத்தை 50.65 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். முன்னதாக, அமெரிக்க டிராக் அண்ட் பீல் சாம்பியன்ஷிப்பில் இவர் 51.41 வினாடிகளை கடந்ததே உலக சாதனையாக இருந்தது. தனது சாதனையை தானே முறியடித்த பெருமை பெற்றார் மெக்லாலின். நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை பெம்கே போல் 52.27 வினாடிகளில் கடந்து வெள்ளி, மற்றொரு அமெரிக்க வீராங்கனை தலிலா முகம்மது 53.13 வினாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கம் வென்றனர். சிட்னி மெக்லாலின் கூறுகையில், ‘‘இந்த தருணம் அற்புதமானது. இதே தளத்தில் மீண்டுமொரு உலக சாதனை நிகழ்த்துவேன் என எதிர்பார்க்கவே இல்லை. நம்பவே முடியவில்லை. எனது இலக்கெல்லாம் சாதனையை நோக்கியதுதான். எந்த தடைகளையும் என்னால் உடைத்தெறிய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.



from Dinakaran.com |24 Jul 2022 https://ift.tt/zemXyCp
via IFTTT

Post a Comment

0 Comments