ஜோதிடம்

* மலேசியாவில்  நடக்கும் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஹாங்காங் வீரர் என்ஜி கா லாங்குடன் நேற்று மோதிய இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 9-21, 17-21 என்ற நேர் செட்களில் தோற்று வெளியேறினார்.* சூப்பர் கிங்ஸ் அகடமி சார்பில்  ‘சூப்பர் 7’  என்ற பெயரில் தலா 7 ஓவர்கள் கொண்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி, சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்கே அகடமியில் (ஜூலை 15-17) நடைபெற உள்ளது. நுழைவுக் கட்டணம் ₹4500. விவரங்கள் அறிய, பதிவு செய்ய: 94868 36724 மற்றும் 96770 53830.* சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான 5வது மகளிர் பாக்சிங்  போட்டியில்   நேற்று  48 கிலோ எடை பிரிவில்  இமாச்சல் பிரதேசத்தின் பிரியா 5-0 என்ற கணக்கில் அசாம் வீராங்கனை சுஜுமா போரோவை வீழ்த்தினார்.



from Dinakaran.com |10 Jul 2022 https://ift.tt/7qG4hyD
via IFTTT

Post a Comment

0 Comments