துபாய்: முதல் முறையாக ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள ஹாங்காங் அணி வலுவான இந்தியா, பாகிஸ்தான் அணிகளை எதிர் கொள்கிறது. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நாளை துபாயில் தொடர்கிறது. இந்தப்போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே தகுதிப் பெற்று விட்ட நிலையில், ஹாங்காங் அணி தகுதிச்சுற்று மூலம் கடைசியாக முன்னேறியுள்ளது. இந்த 6 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடம் பெற்றுள்ள ஏ பிரிவில் ஹாங்காங் அணி இடம் பிடித்துள்ளது.ஐசிசி உறுப்பினராக 1969ம் ஆண்டு முதல் உள்ள ஹாங்காங், முதல்முறையாக டி20 ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே 2018 ஆசிய கோப்பையில் ஹாங்காங் விளையாடி உள்ளது. ஆனால் அது ஒருநாள் போட்டித் தொடர். இந்நிலையில் ஏ பிரிவில் உள்ள வலுவான அணிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகளை ஹாங்காங் எதிர்கொள்ள கொள்கிறது. பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் இருக்கின்றன. நாளை தொடங்கும் ஆசிய கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதிகம் எதிர்ப்பை ஏற்படுத்தும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை மறுநாள் நடக்கும். லீக் சுற்று ஆட்டம் செப்.2ம் தேதி முடிகின்றன. சூப்பர்-4 நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் செப்.3 முதல் செப்.4ம் தேதி நடக்கும். இறுதி ஆட்டம் செப்.11ம் தேதி நடைபெற உள்ளது.
from Dinakaran.com |26 Aug 2022 https://ift.tt/17MK6cz
via IFTTT
0 Comments