துபாய்: ஐசிசி மகளிர் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், இந்திய நட்சத்திரம் ஸ்மிரிதி மந்தனா முதல் முறையாக 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். காமன்வெல்த் டி20ல் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி அரை சதம் விளாசிய மந்தனா 705 தரப் புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 2 இடம் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெக் லேன்னிங் (733), பெத் மூனி (707) முதல் 2 இடங்களில் உள்ளனர். நியூசிலாந்தின் சோபி டிவைன் (700) 4வது இடத்தில் நீடிக்க, இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா (695) 2 இடம் பின்தங்கி 5வது இடத்தில் உள்ளார்.
from Dinakaran.com |03 Aug 2022 https://ift.tt/3kOwFuo
via IFTTT
0 Comments