துபாய்: உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தின் டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்ததால், நின்று பார்க்க 4 ஆயிரம் டிக்கெட்களை கூடுதலாக விற்க போட்டி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.ஆடவருக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அக்.16ம் தேதி முதல் நவ.13ம் தேதி வரை ஆஸ்திரலியாவில் நடைபெற உள்ளது. அதன் சூப்பர் 12 சுற்றின் 2வது பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அக்.23ம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்கள் 5 நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டன. அதில் பெரும்பான்மையான டிக்கெட்களை இந்திய, பாகிஸ்தான் அணிகளின் ரசிகர்கள்தான் வாங்கியுள்ளனர்.மேலும் டிக்கெட்கள் 5 நிமிடங்களில் விற்று தீர்ந்ததால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனை தீர்க்கவும், வருவாய் பார்க்கவும் போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்தனர். அதனையடுத்து ஐசிசி அனுமதியுடன் மேலும் 4 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த டிக்கெட்களை வாங்குபவர்கள் நின்றுக் கொண்டுதான் போட்டியை பார்க்க முடியும். கால்பந்தில் ஆட்டங்களை நின்றுக் கொண்டு பார்க்க தனி கேலரிகள் இருக்கும். அதுபோல் கிரிக்கெட்டு ஆட்டத்தை காணவும் சில அரங்கங்களில் இப்படி அறைகள், அனுமதி உண்டு. ஆனால் அதிகம் பயன்பட்டதில்லை. இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டங்களுக்கு உள்ள வரவேற்பு காரணமாக இப்போது 4ஆயிரம் நின்று பார்க்கும் டிக்கெட்களை விற்க உள்ளனர். சிறுவர்களுக்கு 5 டாலர்களும், பெரியவர்களுக்கு 20 முதல் 30டாலர்களாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் ஒரு லட்சம் இருக்கைகள் உள்ளன. அதில் 1970ம் ஆண்டு அதிகபட்சமாக ஒருலட்சத்து 21 ஆயிரத்து 696பேர் அனுமதிக்க பட்டனர். எனவே இந்த 4 ஆயிரம் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.
from Dinakaran.com |26 Aug 2022 https://ift.tt/azUJqRL
via IFTTT
0 Comments