ஜோதிடம்

ஜூரிச்:  டயமண்ட் லீக் பைனல்ஸ் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா படைத்துள்ளார். ஆண்கள் ஈட்டி எறிதல் பைனலில் பங்கேற்ற ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் (24 வயது) தனது முதல் எறிதலில் தவறிழைத்தாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் 88.00 மீட்டர், 86.11 மீ., 87.00 மீ., மற்றும் 83.60 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார். 2வது முயற்சியில் அவர் 88.00 மீட்டருக்கு ஈட்டி எறிந்தது அதிகபட்சமாக அமைந்து தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது. ஒலிம்பிக்சில் வெள்ளி வென்ற ஜாக்கப் வட்லேச் (செக் குடியரசு) 86.94 மீட்டர் தூரம் எறிந்து 2வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (83.73 மீ.) 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். கடந்த 13 மாதங்களில் ஒலிம்பிக்சில் தங்கம், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, டயமண்ட் லீக் தொடரில் சாம்பியன் என்று தொடர்ச்சியாக அசத்தி வரும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.



from Dinakaran.com |10 Sep 2022 https://ift.tt/NScle16
via IFTTT

Post a Comment

0 Comments