* இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் தொடர் (செப். 20-22) ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மெக்கான் கிரிக்கெட் மைதானத்திலும், ஒரு நாள் போட்டி 24ம் தேதியும் (பனாரஸ்), டெஸ்ட் போட்டி லக்னோவிலும் (செப். 26-28) நடக்க உள்ளன. இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் மேலாளராக ஈரோடு, வடுக பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் அரிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.* சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த கோல் கீப்பர் விருதுகளைப் பெறுவதற்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், பி.ஆர்.ஸ்ரீஜேஷ், சவிதா புனியா இடம் பெற்றுள்ளனர். * ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான தென் ஆப்ரிக்க அணி: பவுமா (கேப்டன்), டி காக், ரீஸா, கிளாஸன், மகராஜ், மார்க்ரம், மில்லர், என்ஜிடி, அன்ரிச் நோர்க்கியா, பார்னெல், பிரிடோரியஸ், ரபாடா, ரைலீ ரூஸோ, ஷம்சி, ஸ்டப்ஸ்.* லாவோசில் நடந்த ஆசிய ஜூனியர் & கேடட் டேபிள் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பயஸ் ஜெயின் - யாஷஸ்வினி கோர்படே ஜோடி 11-9, 11-1, 10-12, 7-11, 11-8 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹான் ஜின்யுவான் - கின் யுஜுவான் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.
from Dinakaran.com |07 Sep 2022 https://ift.tt/znuMBVD
via IFTTT
0 Comments