* சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கும் துலீப் கோப்பை காலிறுதியில் (செப். 8-11) ஹொகைடோ ஷிமோமி தலைமையிலான வடகிழக்கு மண்டலம் அணியுடன் அஜிங்க்யா ரகானே தலைமையிலான மேற்கு மண்டலம் அணி மோதுகிறது. பாண்டிச்சேரியில் தொடங்கும் மற்றொரு காலிறுதியில் மனோஜ் திவாரி தலைமையிலான கிழக்கு மண்டல அணியுடன் மன்தீப் சிங் தலைமையிலான வடக்கு மண்டல அணி மோதுகிறது.* டி20 போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோகித் 3 இடம் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார். சூரியகுமார் ஒரு இடம் பின்தங்கி 4வது இடத்திலும், கோஹ்லி 4 இடம் முன்னேறி 29வது இடத்திலும் உள்ளனர்.* சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இன்று தொடங்கும் டயமண்ட் லீக் பைனல்ஸ் தடகள போட்டித் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய நட்சத்திரம் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார்.* உலக பேட்மின்டன் மகளிர் யு-19 பிரிவு தரவரிசையில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாய (17 வயது) நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட், லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிப்பதால், தொடரை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.
from Dinakaran.com |08 Sep 2022 https://ift.tt/fJqStH3
via IFTTT
0 Comments