* செர்பியாவில் நடந்த 40வது ‘கோல்டன் கிளவ்’ இளைஞர் குத்துச்சண்டை போட்டித் தொடரில் இந்திய அணி 5 தங்கம் உள்பட மொத்தம் 19 பதக்கங்களை வென்று அசத்தியது. இந்திய அணியில் பங்கேற்ற 12 வீராங்கனைகளும் ஏதாவது ஒரு பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.* ஜூலியஸ் பேயர் கோப்பை செஸ் தொடரில் தொடர்ச்சியாக 3 வெற்றிகளைக் குவித்த இந்திய நட்சத்திரம் பிரக்ஞானந்தா 4வது சுற்றில் அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் யூவிடம் (15 வயது) அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதுவரை நடந்த போட்டிகளில் முடிவில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். பிரக்ஞானந்தா, ஹான்ஸ் நியமன், அர்ஜுன் எரிகசி ஆகியோர் தலா 9 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.* இலங்கை கிரிக்கெட் இயக்குனர் பொறுப்பை வகித்து வரும் ஆஸி. முன்னாள் நட்சத்திரம் டாம் மூடி (56 வயது) பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம் - டாம் மூடி இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து 3 ஆண்டு ஒப்பந்தம் முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக டாம் மூடிக்கு சம்பளம் கொடுக்க முடியாததே இதற்கு காரணம்.* வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் ருபெல் உசேன், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 27 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள ருபெல் 36 விக்கெட் (சிறப்பு 5/166) வீழ்த்தியுள்ளார். இனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |20 Sep 2022 https://ift.tt/U8ZoMxR
via IFTTT
0 Comments