ஜோதிடம்

*ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் மாற்று வீரர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர், பும்ராவுக்கு பதிலாக முதன்மை அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தீபக் சாஹரும் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் கராணமாக விலகியுள்ளார். சிராஜ், ஷமி, ஷர்துல் ஆகியோர் விரைவில் ஆஸ்திரேலியா சென்று அணியில் இணைவார்கள் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*ஊக்கமருந்து உபயோகித்தது உறுதியானதை அடுத்து, வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுருக்கு (26 வயது) 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. *ஆஸ்திரேலிய அணியுடன் கான்பெராவில் நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் 8 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது (இங்கிலாந்து 178/7, மலான் 82, மொயீன் 44; ஆஸி. 170/6, மிட்செல் மார்ஷ் 45, ஸ்டாய்னிஸ் 22, டேவிட் 40). கடைசி போட்டி நாளை நடக்கிறது.* உலக கோப்பை டி20 தொடருக்கான தென் ஆப்ரிக்க அணியில், காயம் காரணமாக விலகிய பிரிடோரியசுக்கு பதிலாக மார்கோ ஜான்சென் சேர்க்கப்பட்டுள்ளார்.



from Dinakaran.com |12 Oct 2022 https://ift.tt/aXzRZf5
via IFTTT

Post a Comment

0 Comments