* புரோ கபடி லீக் தொடரில் புனேரி பல்தான் - யு மும்பா அணிகளிடையே நேற்று நடந்த போட்டியில் புனேரி பல்தான் அணி 30-27 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றது.* உலக கோப்பை டி20ல் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என ஆஸி. கிரிக்கெட் மற்றும் ஐசிசி அறிவித்துள்ளன. தொற்று இருந்தாலும் கூட வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.* ஸ்பெயினில் நடந்த ஜிஜோன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பைனலில் ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவ் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் செபாஸ்டியன் கோர்டாவை (அமெரிக்கா) வீழ்த்தி நடப்பு சீசனில் தனது 4வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.* ஐபிஎல் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் டிச.16ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
from Dinakaran.com |17 Oct 2022 https://ift.tt/2YLQuRq
via IFTTT
0 Comments