ஜோதிடம்

ராஞ்சி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் 3 ஆட்டங்களை கொண்ட  டி20 தொடரில் விளையாடியது. அதை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. சொந்த மண்ணில் முதல் முறையாக டி20 தொடரில் தென் ஆப்ரிக்காவை வீழத்திய பெருமிதத்துடன் இந்தியா 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரரில் விளையாடியது. டி20 தொடரை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியா சென்று விட்டது. அதனால் ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் புதிய அணி களம் கண்டது. முதல் ஆட்டத்தில் 9 ரன் வித்தியாசத்தில் தெ.ஆப்ரிக்கா அபார வெற்றிப் பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. அதனால் இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் வென்று பதிலடி தந்தால்தான் இந்தியா தொடரை சமநிலைக்கு கொண்டு வர முடியும். எனவே தவான் தலைமையிலான இந்திய அணியில் வீரர்களின் வரிசையில் கட்டாயம் மாற்றம் இருக்கும். அறிமுக வீரர் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதனால் பந்து வீச்சாளர் யாராவது உட்கார வைக்கப்படலாம். அதே நேரத்தில் ஏற்கனவே வெற்றியை சுவைத்த தெ.ஆப்ரிக்கா இந்த ஆட்டத்தில் வென்றாலே தொடரை கைப்பற்றி இந்தியாவுக்கு பதிலடி தரமுடியும். முதல் ஆட்டத்தில் வெற்றிப் பெற்ற  அணியே 2வது ஆட்டத்திலும் இன்று களம் காணும் வாய்ப்பு உள்ளது. எனினும் ஆட்டத்தை வென்று இந்தியா பதிலடி தருமா, தொடரை வென்று தெ.ஆப்ரிக்கா பதிலடி தருமா என்பதுதான் கேள்வி. விடை எப்படி இருந்தாலும், மழை குறுக்கீடு செய்யாமல் இருந்தால் இன்றைய ஆட்டம்  ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்.வந்தார் வாஷிங்டன்தென்  ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய தீபக் சாஹர் காயம்  காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சைக்காக செல்கிறார். அதனால் அவருக்கு பதில் எஞ்சிய 2 ஆட்டங்களுக்கு ஏற்கனவே ஓய்வில் இருந்த  தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.



from Dinakaran.com |09 Oct 2022 https://ift.tt/wp3lsRm
via IFTTT

Post a Comment

0 Comments